இது தமிழ் மொழியில் உளவியல் , சமூக கருத்துகளை பகிரும் ஒரு முயற்சி .
முடிவுகளை சொல்லுவது எமது முடிவு அல்ல எனினும் தமிழில் இந்த விடயங்கள் பெசபடாமல் இருப்பதால் நிறைய விடயத்தில் தமிழ் சமூகம் இன்னும் அறியாமையில் இருக்கிறது . உளவியல் பற்றி இணையத்தில் தமிழில் தேடும்போது மிக சிறிய அளவில் தான் தகவல்கள் கிடைகின்றன . உளவியல் பற்றியும் உள நோய்கள் பற்றியும் தமிழர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை .உள நோயை அடையாளம் காண்பதிலும் சிக்கல் இருக்கிறது . விதி, கடவுள் ,இயல்பு , என்ற பெயர்களை கூறி சரியான பிரச்சனைகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விடுகின்றோம் . இது பல சமூக குடும்ப பிரைச்சனைக்கு வழிவகுகிறது .உள நோய்கள் மிகவும் பொதுவானது என்பது கூட நமக்கு தெரிவதில்லை . அது எதோ மோசமான நோய் என்பது போல பார்கிறோம் . உண்மையில் காய்ச்சல் போல அதுவும் ஒரு வியாதி தான் அதனை நாம் உணர்வதில்லை .
நமக்கு ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை புரிவதில்லை .புரிந்தாலும் தடுக்க முயல்வதில்லை .பிறர் எப்படி பார்ப்பாரோ எனும் பயம் இருக்கிறது.நமது சமூகமும் அப்படி குறைபாடுடன் தான் இருக்கிறது .இதற்கு முக்கிய கரணம் சரியான விழிப்புணர்வு இல்லாதது மட்டும் தான் . படித்த மக்களே புரிந்து கொள்ளும் அறிவுடன் இல்லை என்பது தான் கவலைக்கு உரிய விடயம் .இப்படி தமிழ் சாமூகத்தில் இருக்கும் பிரைச்சனையை அடையாளம் காணும் ஒரு முயற்சி தான் இந்த திறந்த இந்த திறந்த இதயம் .
No comments:
Post a Comment